tamilfontsteam team mailing list archive
-
tamilfontsteam team
-
Mailing list archive
-
Message #00007
Re: தமிழ் மின்னெழுத்துக்களின் பிழை திருத்தம்
வணக்கம்
தங்கள் மீள்வரவிற்கு வாழ்த்துக்கள். முயற்சிகளுக்கு பாரட்டுகள்.
பல வழுக்கள் திருத்தப்படவுள்ளன. வழு அறிக்கைகளை
https://bugs.launchpad.net/~tamilfontsteam பக்கத்தில் பதிவதா அல்லது
இம்மடலாற்ற குழுமத்துக்கு மின்னஞ்சல் இட வேண்டுமா? .
வழுக்களுக்கான பக்கதில் பதிவதானால் எம்மொழியில் எழுதப்பட வேண்டும்?
அநேகமாக இன்று பின்மாலைப் பொழுதில் எழுதவுள்ளேன்
~சேது
2009/6/24 suji A <suji87.msc@xxxxxxxxx>:
> வணக்கம்,
>
> உபுண்டு களஞ்சியத்தில் ttf-tamil-fonts என்ற பொதியினுள் மூன்று தமிழ்
> மின்னெழுத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவை சில பிழைகளை கொண்டிருக்கின்றன. நான்
> அந்த பிழைகளை திருத்தி உள்ளேன்.
>
> பிழை உள்ள மின்னெழுத்துக்கள்: TAMu_Maduram.ttf, TAMu_Kalyani.ttf,
> TAMu_Kadampari.ttf
>
> பிழை: இந்த மின்னெழுத்துக்களை பயன்படுத்தி தமிழ் சொற்களும் ஆங்கில சொற்களும்
> கலந்த பத்திகளை தட்டெழுத முடியாது
>
> விளக்கம்: உதாரணத்திற்கு TAMu_Maduram.ttf என்ற மின்னெழுத்தை fontforge மூலம்
> திறக்கும் போது ஆங்கில எழுத்திற்குரிய இடங்களில் தமிழ் எழுத்துக்கள் இருப்பதை
> காணலாம். இதனால் இந்த மின்னெழுத்துக்களை பயன்படுத்தி ஆங்கிலம் மற்றும் தமிழ்
> சொற்க்கள் கலந்த பத்திகளை தட்டெழுதுகிற பொழுது ஆங்கில எழுத்துக்கள் இருக்க
> வேண்டிய இடங்களில் தமிழ் எழுத்துக்கள் வந்து அவற்றை புரியாத வார்த்தைகளாக
> மாற்றி விடுகின்றன.
>
> பிழை நீக்கப் பட்ட மின்னெழுத்துக்கள்: Maduram.ttf, Kalyani.ttf, Kadambri.ttf
>
> இந்த மடலுடன் பிழை உள்ள மின்னெழுத்துக்களையும் பிழை நீக்கிய
> மின்னெழுத்துக்களையும் இணைத்துள்ளேன். தாங்கள் அந்த மின்னெழுத்துக்களை
> உபயோகித்து பார்த்து வேறு ஏதாவது பிழை இருப்பின் எனக்கு தெரிய படுத்தவும்
>
>
> --
> அ. சுஜி
>
>
>
>
>
> _______________________________________________
> Mailing list: https://launchpad.net/~tamilfontsteam
> Post to : tamilfontsteam@xxxxxxxxxxxxxxxxxxx
> Unsubscribe : https://launchpad.net/~tamilfontsteam
> More help : https://help.launchpad.net/ListHelp
>
>
Follow ups
References