| Thread Previous • Date Previous • Date Next • Thread Next |
வணக்கம்,
உபுண்டு களஞ்சியத்தில் ttf-tamil-fonts என்ற பொதியினுள் மூன்று தமிழ்
மின்னெழுத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவை சில பிழைகளை கொண்டிருக்கின்றன. நான்
அந்த பிழைகளை திருத்தி உள்ளேன்.
பிழை உள்ள மின்னெழுத்துக்கள்: TAMu_Maduram.ttf, TAMu_Kalyani.ttf,
TAMu_Kadampari.ttf
*
பிழை:* இந்த மின்னெழுத்துக்களை பயன்படுத்தி தமிழ் சொற்களும் ஆங்கில சொற்களும்
கலந்த பத்திகளை தட்டெழுத முடியாது
*விளக்கம்:* உதாரணத்திற்கு TAMu_Maduram.ttf என்ற மின்னெழுத்தை fontforge மூலம்
திறக்கும் போது ஆங்கில எழுத்திற்குரிய இடங்களில் தமிழ் எழுத்துக்கள் இருப்பதை
காணலாம். இதனால் இந்த மின்னெழுத்துக்களை பயன்படுத்தி ஆங்கிலம் மற்றும் தமிழ்
சொற்க்கள் கலந்த பத்திகளை தட்டெழுதுகிற பொழுது ஆங்கில எழுத்துக்கள் இருக்க
வேண்டிய இடங்களில் தமிழ் எழுத்துக்கள் வந்து அவற்றை புரியாத வார்த்தைகளாக
மாற்றி விடுகின்றன.
பிழை நீக்கப் பட்ட மின்னெழுத்துக்கள்: Maduram.ttf, Kalyani.ttf, Kadambri.ttf
இந்த மடலுடன் பிழை உள்ள மின்னெழுத்துக்களையும் பிழை நீக்கிய
மின்னெழுத்துக்களையும் இணைத்துள்ளேன். தாங்கள் அந்த மின்னெழுத்துக்களை
உபயோகித்து பார்த்து வேறு ஏதாவது பிழை இருப்பின் எனக்கு தெரிய படுத்தவும்
--
அ. சுஜி
Attachment:
TAMu_Maduram.ttf
Description: Binary data
Attachment:
TAMu_Kalyani.ttf
Description: Binary data
Attachment:
TAMu_Kadampari.ttf
Description: Binary data
Attachment:
Maduram.ttf
Description: Binary data
Attachment:
Kalyani.ttf
Description: Binary data
Attachment:
Kadambri.ttf
Description: Binary data
| Thread Previous • Date Previous • Date Next • Thread Next |