← Back to team overview

tamilfontsteam team mailing list archive

Re: தமிழ் மின்னெழுத்துக்களின் பிழை திருத்தம்

 

2009/6/24 amachu <amachu@xxxxxxxxxx>:
> கா. சேது | K. Sethu wrote:
>>
>> பல வழுக்கள் திருத்தப்படவுள்ளன. வழு அறிக்கைகளை
>> https://bugs.launchpad.net/~tamilfontsteam பக்கத்தில் பதிவதா அல்லது
>> இம்மடலாற்ற குழுமத்துக்கு மின்னஞ்சல் இட வேண்டுமா? .
>>
>>
>
> முழுமைப் பெறும் வரை  இங்கே தெரிவியுங்கள். பொதுவில் அறிவித்த பின்னர் அங்கு
> இடலாம். (அங்கேயும் இடலாம் என்றே தோன்றுகிறது)
>>

அங்கு பதிவிடின் பயன்கள் சில உள்ளன. எனினும் தாங்கள் கூறுவது போல பின்னர்
அவ்வாறு செய்யலாம்.


>> வழுக்களுக்கான பக்கதில் பதிவதானால் எம்மொழியில் எழுதப்பட வேண்டும்?
>>
>
> தமிழிலேயே இருக்கலாம். அதுவே நாம் பயன்படுத்தும் சொற்கள் அதிகப் புழக்கத்தில்
> வர உதவும்.
>>
>> அநேகமாக இன்று பின்மாலைப் பொழுதில் எழுதவுள்ளேன்
>>
>
> நல்லது.
>

இன்று இங்கு இரு விடயங்களைப் பற்றி எழுதுகிறேன். மேலும் 4 -5 வகை
வழுக்கள் கண்டுள்ளேன் - அவற்றைப்பற்றி அடுத்த சில நாட்கள் எழுதுவேன்.

1) முதலாவதாக காதம்பரி மற்றும் கல்யாணி கோப்புகளில் போலல்லாமல் மதுரம்
கோப்பினுள் கட்டற்ற / திறந்த மென்பொருள் என அளிப்புரிம வசனங்கள் இல்லையே?
நான் சில மாதம் முன் கம்பன் மென்பொருள் வலைத்தளத்தில் (http://
www.kamban.com.au/fonts/maduram.ttf ) இலிருந்து பதிவிறக்கிய
maduram.ttf இல் கூட GPL எனவே அளிப்புரிமம் உள்ளது.  தற்போது விடுபட்டு
போய்யுள்ளதா அல்லது பழைய கோப்பு தவறாக வந்துள்ளதா?

2) அடுத்து கல்யாணியில் இன்னும் அகற்றப்பட வேண்டிய ஒருங்குறிக்குப்
பொருத்தமற்ற  எழுத்துவடிவங்கள் பற்றி -

(அவதானிக்கவும் : நான் எழுத்துவடிவம் என்பது glyph ஐத் தான்.
glyph=எழுத்துரு என்ற தமிழாக்கத்தை தவிர்ப்பதன் காரணம் வலையுலகில்
மிகப்பரம்பலாகவும் மற்றும் கநோம் மேசைத்தளத்திலும் எழுத்துரு = font
என்பது வேரூன்றி நிலைத்து விட்டது என்பதால்)

இத்துடன் இணைத்துள்ள fontforge இல் கல்யாணி மின்னெழுத்தைத் திறந்து
எடுத்த திரைக்காட்சியைப் பார்க்கவும். அதில் சிவப்பு கட்டங்கள் இட்டு
காட்டியுள்ள குறியேற்ற இடங்களில் ஒருங்குறி குறியேற்றப்பட்ட எழுத்துக்கள்
/ சின்னங்கள் / குறியீடுகள் / கட்டுப்பாட்டு  எழுத்துக்களுக்கு முரணாக
வேறு எழுத்துக்கள் அல்லது குறியீடுகள் உள்ளதைப் பார்க்கவும். அவைகளும்
TAMu_Kalyani இல் இருந்து வந்தவைகளே. அவைகள் பின்வருமாறு ( அடைப்ப்பினுள்
நான் எழுதியுள்ளது  அக் குறியேற்ற இடத்தில் இருக்க வேண்டிய எழுத்து
அல்லது குறியீடின்  பெயர் ):

U+007E (tilde)
U+007F (DEL)
U+0080 (Control Character)
U+0081 (Control Character)

U+008D (Control Character)

U+00A5 (yen)
U+00CA (Ecircumflex)

U+00D2 (Ograve)
U+00D3 (Oacute)
U+00D4 (Ocircmflex)
U+00D2 (Otilde)

U+00E7 (Ccedilla)

U+0133 (Latin Small ligature IJ)
U+0134 (Latin Capital J with Circumflex)
U+0134 (Latin Small J with Circumflex)
U+0134 (Latin Small J with Circumflex)
U+0135 (Latin Capital K with Cedilla)

எனவே அக்குறியேற்ற இடங்களில் உள்ளவைகளை அகற்றி அவற்றை வெற்றிடங்களாகவோ
அல்லது அவ்விடங்களில் இருக்க வேண்டிய சரியான ஒருங்குறி எழுத்துக்கள் /
குறியீடுகள் களின் எழுத்துவடிவங்களை நிரப்பியோ  இவ்வித வழு களையப்பட
வேண்டும்.

காதம்பரி மற்றும் மதுரம் கோப்புகளிலும் அத்தகைய தேவையற்ற ஒருங்குறிக்கு
முரணான எழுத்துவடிவங்களை கண்டறிந்து அகற்ற வேண்டும்.

மேலும் வரும் நாட்களில் வேறு வழுக்கள் பற்றி எழுதவுள்ளேன்

~சேது

Attachment: kalyani-bugrpt-1.png
Description: PNG image


References